தேசிய புள்ளியியல் ஆணைய தலைவர், செயல் தலைவர் ராஜினாமா: மத்திய அரசு ஓரம் கட்டியதாக புகார்

புதுடெல்லி:

மத்திய அரசு தங்களை ஓரம் கட்டியதால், பதவியை ராஜினாமா செய்ததாக, தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


தேசிய புள்ளியியல் ஆணையத்தின் ( என்எஸ்சி) தலைவர் பிசி.மோகனன் மற்றும் செயல் தலைவராக ஜேவி. மீனாட்சி ஆகியோர் பதவி வகித்தனர்.

மத்திய அரசு தங்களை ஓரம் கட்டுவதாகக் கூறி இருவரும் கடந்த திங்களன்று பதவியை ராஜினாமா செய்தனர். தங்களை கலந்து ஆலோசிக்காமல் ஒவ்வொரு விசயத்திலும் மத்திய அரசு செயல்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனினும், எங்களை அரசு தொடர்ந்து ஓரம் கட்டி வந்தது. தேசிய புள்ளியியல் ஆணையத்தின் சமீபத்திய சர்வே முடிவுகளை அரசு செயல்படுத்தவில்லை.

2017-18-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான வேலைவாய்ப்பு சர்வேயை அமல்படுத்தவில்லை.
கடந்த டிசம்பர் 5-ம் தேதி கொல்கத்தாவில் நடந்த என்எஸ்சி கூட்டத்தில் இந்த சர்வே அறிக்கையை செயல்படுத்த ஒப்புதல் தரப்பட்டது.

நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது என நினைத்தேன். அதனால் பதவியை ராஜினாமா செய்தேன் என்றார்.