பம்பை:

மும்பை தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து காயமடைந்த தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) கமாண்டோ பி.ஓய். மானேஷ் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டார்.

இந்த தாக்குதலில் அவரது உடலின் ஒரு புறம் முற்றிலும் செயலழிந்த நிலையில் மாலை அணிந்து, இடுமுடி கட்டி 18 படிகள் வழியாக ஏறிச் சென்று அய்யப்பனை அவர் தரிசித்தார். கேரளா மாநிலத்தை சேர்ந்த அவர் வீரதீர செயல்களுக்காக சவுரிய சக்ரா விருது பெற்றார்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின் சொந்த மாநிலமான கேரளாவில் கண்ணூரில் பணியமர்த்தப்பட்டார். எனினும் இவர் டில்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதோடு, அவரது உதவியாளராக நியமனம் செய்யப்பட்டவரும் திரும்ப பெறப்பட்டர். கருணை அடிப்படையில் இந்த இடமாற்ற உத்தரவை டில்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ராணுவம் மற்றும் மத்திய அரசும் பதிலளிக்க 2014ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு, ராணுவ அதிகாரிகளால் தொடர் துன்புறுத்தல், மிரட்டல்களுக்கும் மானேஷ் ஆளாகி வந்துள்ளார். அவரது மருத்துவ செலவை கூட ஏற்காமல் ராணுவ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வந்தனர். பின்னர் டில்லி உயர்நீதிமன்றம் தலையிட்டதை தொடர்ந்து மருத்துவ கட்டணத்தை ராணுவம் செலுத்தியது. அவரை டில்லிக்கு இடமாற்றம் செய்து ராணுவம் உத்தரவிட்டது.

கருணை அடிப்படையில் தான் கேரளா மாநிலம் கண்ணூரில் பணியமர்த்தப்பட்து குறித்து மானேஷ் எடுத்துக் கூறியும் பலனில்லை. பின்னர் அவரது மனைவி அப்போதைய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியை சந்தித்து முறையிட்ட பிறகே இதற்கு தீர்வு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.