பாலியல் புகார் : காங்கிரஸ் மாணவர் அணித் தலைவர் பதவி விலகல்

டில்லி
பாலியல் புகார் காரணமாக காங்கிரஸ் மணவர் அணித் தலைவர் ஃபைரோஸ் கான் ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி இந்திய தேசிய மாணவர் சங்கம் ஆகும். இதை ஆங்கிலத்தில் நேஷனல் ஸ்டூடன்ட்ஸ் ஆஃப் இந்தியா என அழைக்கப்படுகிறது. இதன் தலைவர் ஃபரோஸ் கான் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். காஷ்மீர் மாநிலத்தில் இருந்து இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் இவர்  என்பது குறிப்பிடத்தக்கது/.

இவர் மீது ஒரு பெண் பாலியல் புகார் தெரிவித்தது காங்கிரஸ் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பை உண்டாக்கியது. அதே நேரத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் காங்கிரஸ் தொண்டர் இவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த்ததாக டில்லி பார்லிமெண்ட் தெரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தன் மீது எழுந்த பாலியல் புகார் காரணமாக ஃபைரோஸ் கான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டு இவரை கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளார்.

இவர் மீது எழுந்துள்ள பாலியல் புகார் குறித்து விசாரிக்க காங்கிரஸ் கட்சி மூவர் குழு ஒன்றை அமைக்க உள்ளது. அந்தக் குழு ஃபைரோஸ் கான் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணையை விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.