2019 நீட் தேர்வு: மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்னும் 7 நாட்கள் மட்டுமே….

சென்னை:

2019ம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவ மாணவகிள் அதற்கான தகுதி தேர்வான,  நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும்  7 நாட்கள் மட்டுமே உள்ளன. இதுவரை விண்ணப்பிக்காத மாணவ மாணவிகள் உடனே விண்ணப்பியுங்கள்.

மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ‘நீட்’ தேர்வை எழுத வேண்டியது கட்டாயம். இந்த தேர்வுக்கான விண்ணப்பம் நவம்பர் 1ந்தேதி தொடங்கி  நவ.30ந்தேதி வரை நடைபெறுகிறது.

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் போன்ற படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.  இதுவரை சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்திய வந்த நீட் போன்ற தேசிய தேர்வுகளை தற்போது, தேசிய தேர்வு நிறுவனம் என்ற  அமைப்பு நடத்தி வருகிறது.  நாடு முழுவதும் நீட் தேர்வுகளை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க என்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே 2019ம் ஆண்டு  நீட் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வு நிறுவனம் அறிவித்திருந் தது. அதன்படி, அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி  நடைபெற்ற வருகிறது. வரும்  30-ம் தேதி வரை நீட் தேர்வெழுதுபவர்கள் முன்பதிவு செய்யலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த வர்கள் அடுத்த ஆண்டு (2019)  மே 5-ம் தேதி நீட் தேர்வை எழுத வேண்டும்.

இதற்கிடையில்,  மருத்துவ படிப்பில் சேர விரும் பும் அனைத்து மாணவ-மாணவி களையும் ‘நீட்’ நுழைவுத் தேர் வுக்கு ஆன்லைனில் விண்ணப் பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தி

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட் டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள் தங்கள் மாவட்டத்தில் எந்த மாணவரும் பாதிக்காத வகையில் கூடுதலாக சிறப்பு கவனம் செலுத்தி ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மாணவ மாணவிகள் விரைந்து தங்களது விண்ணப்பிங்களை ஆன்லைனில் பதிவேற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களை தேவைப்படின் கீழே உள்ள இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்

https://www.nta.ac.in/