2019ம் ஆண்டுக்கான நீட் தேர்வு: இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடங்கியது
டில்லி:
தேசிய தேர்வு நிறுவனம் அறிவித்து உள்ளபடி 2019ம் ஆண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது. இந்த தேர்வு பதிவுக்கு ஆதார் எண் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் போன்ற படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதுவரை சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்திய வந்த நீட் போன்ற தேசிய தேர்வுகளை தற்போது, தேசிய தேர்வு நிறுவனம் என்ற அமைப்பு நடத்தி வருகிறது.
உயர் கல்விகள் கற்க விரும்பும் மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வுகளை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க என்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே 2019ம் ஆண்டு நீட் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வு நிறுவனம் அறிவித்திருந் தது. அதன்படி, அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி உள்ளது. இன்றுமுதல் வரும் 30-ம் தேதி வரை நீட் தேர்வெழுதுபவர்கள் முன்பதிவு செய்யலாம். 2019 மே 5-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.
நீட் தேர்வானது ஏற்கனவே நடைபெற்று வந்ததை போலவே பேப்பர் மற்றும் பேனா மூலம் நடைபெறும் என்றும், இதற்கான விண்ணப்ப பதிவுக்கு ஆதார் எண் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை தேவைப்படின் கீழே உள்ள இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்