டில்லி:

மிழகத்தின் கடும் எதிர்ப்பை உதாசினப்படுத்தி உள்ள  மத்திய அரசு , கூடங்குளம் அணுஉலைகளில் உருவாகும் கழிவுகள், அங்கேயே சேமித்து வைக்கப்படும் என்று மீண்டும் மத்தியஅரசு நாடாளு மன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அணுஉலைகளில் இருந்து உருவாகும் அணுக்கழிவுகள் சேமித்து வைப்ப தில் பல்வேறு இடற்பாடுகள் உள்ளன.  உலகெங்கும் அணு மின் நிலையக்கழிவுகளை அப்புறப்படுத்தி அழிப்பது மிகவும் ஆபத்தானதாகவும், கனிமானதாகவும் உள்ளது. உயிரினங்க ளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை  அணுக்கழிவு என்பதால், என்பதால் அவற்றை நிலம், கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் சேமிப்பதற்கு சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவிலும் அணுக்கழிவுகளை சேமிக்க இதுவரை  சரியான இடம்  தேர்வு செய்யப்பட வில்லை. நிரந்தரமாக சேமித்து வைக்கும் மையம் (Deep Geological Repository) அமைப்பதற்கான இடத்தை இந்திய அரசு இன்னும் தேடி வருகிறது.

இந்தா நிலையில், கூடங்குளம் அணு உலைகளில் இருந்து உருவாகும் அணுக்கழிவுகளை, அங்கேயே சேமித்து வைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு சமீபத்தில்  தெரிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

இதைத்தொடர்ந்து, கடந்த 10ஆம் (ஜூலை) தேதி பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம்  ராதா புரத்தில் நடைபெறும் என, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதையடுத்து கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஜிதேந்திரா,  கூடங்குளம் 1 மற்றும் 2வது உலையில் உருவாகும் அணுக்கழிவுகள், தற்போதைக்கு அணுக்கழிவு சேகரிப்பு தொகுப்பிலேயே சேகரித்து வைக்கப்படும் என்றும், ஏஎஃப்ஆர் எனப்படும் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதிபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  கூறினார்.

மேலும்,  ஏஎஃப்ஆர் எனப்படும் அணுக்கழிவு சேமிப்பு மையம், சட்டபூர்வமான அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே கட்டப்படத் தொடங்கும் என கூறியவர்,  கூடங்குளம் அணுமின் திட்ட வளாகத்திலேயே அணுக்கழிவு சேமிப்பு மையத்தை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக வும் கூறினார்.

அணுக்கழிவு மையம் கூடங்குளத்தில் அமைக்க தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வரும் நிலையில், அதை மீறி அணுக்கழிவு மையம் அமைக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உளளது.