குடியரசு தலைவர் விருது பெற்ற “நிர்வாண” கார்டூனிஸ்ட்

 

கார்டூனிஸ்ட் பாலா, தான்  வரைந்த (கிட்டதட்ட) நிர்வாண கார்டூனுக்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளார். அவது கைது சரியா தவறா என பெரும் சர்ச்சை சமூகவலைதளங்களில் நடந்து வருகிறது. அதற்கு இணையாக, “கார்டூன் என்றாலும் நிர்வாணாக வரைவது சரிதானா” என்றும் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள ஒரு பதிவு புதிய செய்தி ஒன்றைச் சொல்கிறது.

அந்த பதிவின் சாராம்சம் இதுதான்.

1975ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.  அப்போது குடியரசுத்தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமதுவை நிர்வாணமாக கார்டூனில் சித்தரித்தார் கார்டூனிஸ்ட் அபுஅப்ரஹாம்.

பிரதமர் இந்திராகாந்தியின் ரப்பர் ஸ்டாம்பாக பக்ருதீன் இருக்கிறார் என்பதைக் குறிக்க இவ்வாறு கார்டூன் வரைந்தார்.

அப்போது பத்திரிகைகளுக்கு தீவிரமாக தணிக்கை இருந்த நேரம். அதையும் மீறி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் இந்த கார்டூன் வெளியானது.

கார்டூனிஸ்ட் அபுஅப்ரஹாமை கைது செய்ய வேண்டும் என்று ஆளும் தரப்பில் இருந்து குரல்கள் எழும்பின.

ஆனால், சர்வதேச கண்டணங்களுக்கு அஞ்சி, அவர் கைது செய்யப்படவில்லை.

பின்னாட்களில் கார்டூனிஸ்ட் அபு அப்ரஹாமுக்கு குடியரசுத்தலைவர் விருது கிடைத்தது.