பாரிஸ்,

பிரான்சில்  உடைகளின்றி  சுதந்திரமாக உணவுகள் உண்ணும் வகையில்  உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயெ இதுதான் முதல் ஓட்டல் என்றும் கூறப்படுகிறது.

ஓ நேச்சுரல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உணவகத்தில் உணவு அருந்த வருபவர்கள், அங்குள்ள அறைகளில் தங்களது உடைகளை களைந்துவிட்டு, நிர்வாண நிலையில் சுதந்திரமாக உணவுகளை உட்கொள்ளலாம்.

உலகம் முழுவதும் நிர்வாணத்தை விரும்பும் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தியாவிலும் வடமாநிலங்களில், அகோரிகள் எனப்படும் சாதுக்கள் பொதுவாக நிர்வாணமாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரான்சிலும் ஓட்டல் ஒன்றில் பிறந்த மேனியா உணவுகளை உண்ணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டு மக்களின் மனநிலையை மேம்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு, நாடு முழுவதும் 460 சுற்றுலா தலங்களை, நிர்வாண சுற்றுலாக்கென அறிவித்து உள்ளது.

இதில், 73 கடற்கரை சுற்றுலா தலங்களும், 155 சுற்றுலாத்தலங்கள் இரவு தங்கி செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், பாரிஸ் நகரில் மத்தியில் அமைக்கப்பட்டு நிர்வாண உணவகத்துக்கு ஓ நேச்சுரல் என பெயரிடப்பட்டுள்ளது. இது நாட்டின் முதல் நிர்வாணமாக உணவகம் என்றும் கூறப்பட்டு  உள்ளது.

இந்த உணவகத்துக்கு சாப்பிட வருபவர்கள், தங்களது உடைகளை களைந்து அதற்கென ஒதுக்கப்பட்ட அறையில் பத்திரப்படுத்தி விட்டு, பிறந்த மேனியுடன் ரிலாக்சாக இருக்கலாம் என்றும், அவ்வாறே உணவருந்தலாம் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அவர்கள் உடைகளை களைய விரும்பவில்லை என்றாலும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 40 பேர் அமர்ந்து உணவருந்தலாம் என்றும், பப்பே வசதியும் உண்டு. இந்த உணவகத்துக்கு வர விரும்புபவர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். இதற்காக ஆன்லைன் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.