2015-16ம் ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவு

டில்லி:

2014–15ம் நிதியாண்டை விட 2015-16ம் ஆண்டில் 2.06 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தி உள்ளனர்.

2014-15ம் ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் 3.65 கோடி. இதில் 1.91 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தினர். ஆனால் 2015-2016ம் நிதியாண்டில் வருமான கணக்கு தாக்கல் செய்தவர்கள் 4.07 கோடி பேர். இதில் 2.06 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளனர்.

அதாவது 1.7% பேர் மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளனர். 2.01 கோடி பேர் வருமான வரி செலுத்தவில்லை. வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வருமான வரி மூலம் 2014-15ம் ஆண்டில் ரூ.1.91 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. 2015-16ம் ஆண்டில் ரூ.1.88 லட்சம் கோடி மட்டுமே வருமான வரி வசூலாகியுள்ளது.