வளைகுடா வாழ் இந்தியர்கள் தற்கொலை அதிகரிப்பு

டில்லி

ளைகுடாவில் உள்ள இந்தியர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருவதாக தகவல் அறியும் சட்ட அறிவிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

வளைகுடா நாடுகள் என்றாலே இந்தியர்களிடையே ஒரு வகை ஈர்ப்பு உள்ளது.     வளைகுடா நாடுகள் என்றாலே செல்வச் செழிப்புள்ள நாடுகள் எனவும் அந்நாட்டில் பணி புரிவோர் மிகுந்த செல்வந்தர்கள் எனவும் மக்களிடையே பரவலான எண்ணம் உள்ளது.    அது மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வளைகுடா பகுதிகளில் பணி புரிய பலர் பணம் செலவழிக்கவும் தயாராக உள்ளனர்.

அதே நேரத்தில் வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலர் தற்கொலை செய்துக் கொள்ளும் செய்திகள் அதிகரித்து வருகிறது.   இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட விவரங்களுக்கு இந்திய தூதரகங்கள் பதில் அளித்துள்ளது.

மஸ்கட், குவைத், துபாய், மற்றும் ரியாத் ஆகிய நான்கு நகர தூதரகம் அளித்த தகவலின் படி வளைகுடா நாடுகளில் சுமார் 322 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.   இதில் அதிகமாக சௌதி அரேபியாவில் மட்டும் 117 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளன்ர். அதற்கு அடுத்தபடியாக அமீரகத்தில் 116 பேரும் ஒமனில் 46 பேரும், குவைத்தில் 43 பேரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

இதற்கு முந்தைய ஆண்டான 2016 ஆம் வருடம் இந்த நாடுகளில் 303 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.  இதற்கு சரியில்லாத நிதி மேலாண்மை, குடும்ப தகராறுகள்,  உத்திரவாதம் இல்லாத பணிகள் ஆகியவை காரணமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து ஓமன் நாட்டை சேர்ந்த ஷாஜி செபஸ்டியன், “கடந்த 30 வருடங்களாக வளைகுடா நாடுகளில் பணி புரிவோருக்கு தொல்லைகள் அதிகரித்து வருகின்றன.   இதை மன தைரியத்துடன் எதிர்கொள்ளும் இந்தியர்கள் குறைந்து வருகின்றனர்.   ஒரு சிறு விவகாரம் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.   மேலும் வெளிநாட்டில் இருப்பதால் தங்களை கவனிக்க ஆளில்லை என்னும் தனிமை உணர்வும் அதிகரித்ஹு வருகிறது.” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Number of Indian suicide in gulf countries are increasing
-=-