4ஆண்டுகளில் 60 சதவிகிதம் உயர்ந்த கோடீஸ்வரர்கள்: மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் தகவல்

டில்லி:

ந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 60 சதவிகிதம் உயர்ந்து இருப்பதாக மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் தெரிவித்து உள்ளது.

பாஜக அரசு பதவி ஏற்றது முதல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் வருமான வரி கட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், ஆண்டு வருமானம் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாக கூறி வரி செலுத்தி வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 60 சதவிகிதம் உயர்ந்து உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் விவர பட்டியல் வெளியிட்டு உள்ளது. அதில்,  ரூ.1 கோடிக்கு அதிகமாக ஆண்டு வருமானம் இருப்பதாக கூறி  வரி செலுத்தியவர்கள் (தனியார் நிறுவனங்கள் உள்பட) எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது என பட்டியலிட்டு உள்ளது.

இந்த உயர்வானது கடந்த  2014-15-ம் நிதியாண்டில்,  88 ஆயிரத்து 649 பேர் 1கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்துக்கு கணக்கு சமர்ப்பித்து உள்ளனர். இந்த எண்ணிக்கை 2017-18-ம் நிதி ஆண்டின்போது, 1லட்சத்து 40 ஆயிரத்து 139 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 68 சதவீதம் அளவு உயர்ந்திருப்பதாக தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து கூறிய மத்திய நேரடி வரி விதிப்பு வாரிய தலைவர் சுஷில் சந்திரா, கடந்த 4 ஆண்டுகளாக அரசின் சட்ட ரீதியான மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை போன்ற தகவலகள்    அடிப்படையில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையே இந்த வருமான வரி  உயர்வுக்கு காரணம் என்றும்,  கடந்த  4 ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையும் 3.79 கோடியில் இருந்து 6.85 கோடியாக (80 சதவீதம்) உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.