சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 93 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு கூறி உள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை சேர்ப்பது குறித்து தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும்.

கடந்த தேர்தல் பணிக்கு 3.50 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர். ஆனால், இந்த முறை 4.50 லட்சம் பேரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 68 ஆயிரத்தில் இருந்து 93 ஆயிரமாக உயர்த்தப்படும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் ஓட்டுகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடலாம் என்றும், மற்றவர்கள் வாக்குச் சாவடிக்கு வந்தே வாக்களிக்கலாம் என்று தெரிவித்தார்.