கன்னியாஸ்திரி பாலியல் புகார்: கேரள பிஷப் பிராங்கோவுக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமின்!

கொச்சி:

ன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை தொடர்பாக  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கேரள முன்னாள் பிஷப்  பிராங்கோ முள்ளக்கலுக்கு கேரள உயர்நீதி மன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால், அவர் கேரள மாநிலத்திற்குள் நுழைய தடை விதித்தது.

கேரள மாநிலம் கோட்டயம், குருவிலங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கொடுத்தார். கடந்த 2014 முதல் 2016ம் ஆண்டு வரை பல முறை தன்னை 13 முறை  வன்புணர்வு செய்தார் என்று கன்னியாஸ்திரி புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரின் மீது தொடக்கத்தில்  காவல்துறையினர்  நடவடிக்கை எடுக்காததால், மாநிலம் முழுவதும் கன்னி யாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் தலைமறைவான பாதிரியாளர்கள் ஜாமின் கோரி உச்சநீதி மன்றத்தை நாடினர். ஆனால்,  அவர்கள் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உச்சசீதி மன்றம், பாதிரியார்கள் உடனே சரணடைய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கன்னியாஸ்திரிகள் போராட்டம் தீவிரமான நிலையில், காவல் துறை பிராங்கோவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.  புகார் குறித்து 3 நாட்கள் விசாரணை நடத்திய காவல்துறையினர், பிஷப் பிராங்காவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பிஷப் பிராங்கோ, தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று கோட்டயம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், கேரள உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் பிராங்கோ முள்ளக்கல்லின் ஜாமின் மனுவை 2 முறை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் மீண்டும் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பேராயர் பிராங்கோ தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, அரசு வழக்கறிஞர் பிராங்கோவுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  கேரள உயர்நீதி மன்றம்  பிராங்கோவுக்கு ஜாமின் வழங்கியது.

மேலும், பிஷப் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்  என்றும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை விசாரணை அதிகாரிக்கு முன்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன் கேரளாவில் நுழைவதற்கும் அவருக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.