கன்னியாஸ்திரி பலாத்காரம் : பிஷப்புக்கு சம்மன்

கொச்சி

ன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரை ஒட்டி பிஷப்புக்கு கேரள காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த பிராங்கோ முலக்கல் என்பவர் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக உள்ளார்.   சுமார் 54 வயதான இவர் தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்துள்ளார்.   அந்த புகாரில்  கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குருவிலங்காடு பகுதியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தன்னை பிராங்கோ முதல் முறையாக பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் வைக்கம் துணை சூப்பிரண்டு சுபாஷால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.   இவர் அந்த கன்னியாஸ்திரியுடன் பணி புரியும் நான்கு பேரில் இருவரிடம் விசாரணை நடத்தி உள்ளார்.  அவர்கள் இந்த சம்பவம் நடந்தது உண்மை எனவும் இது குறித்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி  கார்டினலுக்கு புகார் அளித்ததாகவும் கூறி உள்ளனர்.   அத்துடன் இந்த பிஷப் மீது கார்டினல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரணைக்கு பிஷப் கேரளாவுக்கு வர வேண்டும் என ஜலந்தர் மறை மாவட்ட பிஷப் பிராங்கோவுக்கு சுபாஷ் சம்மன் அனுப்பி உள்ளார்     மேலும் தமக்கு பிஷப் பலாத்காரம் செய்தது குறித்து எந்த புகரும் வரவில்லை என கார்டினல் சுபாஷிடம் தெரிவித்துள்ளார்.