டில்லி

நாடெங்கும் உள்ள பல கன்னியாஸ்திரிகள் பாதிரியார்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி வருகின்றதை ஊடகம் வெளியிட்டுள்ளது

.

பிரபல ஊடகமான அசோசியேடட் பிரஸ் சமீபத்தில் கன்னியாஸ்திரிகள் நிலை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. ஏற்கனவே இந்த ஊடகம் ஆசிய நாடுகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதாக தகவல்கள் வெளியிட்டிருந்தன. இப்போது இந்தியா முழுவதும் உள்ள கன்னியாஸ்திரிகளிடம் ஆய்வு விசாரணை நடத்தி உள்ளது.

அந்த விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்களின் சுருக்கம் பின் வருமாறு :

பல கன்னியாஸ்திரிகள்  அறைக்குள் பாதிரியார்கள் நுழைந்து வலுக்கட்டாயமாக பாலியல் உறவுக்கு அவர்களை வற்புறுத்தி உள்ளனர். கன்னியாஸ்திரிகள் பாதிரியார்களை ஏசுவின் தூதர்கள் என நம்பிய போது தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் பலர் முதலில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கன்னியாஸ்திரியிடம் ஒரு பாதிரியார் குடித்து விட்டு அத்து மீறி நடந்துக் கொண்டுள்ளார். இது குறித்து புகார் அளித்தால் கத்தோலிக்க தலைமை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


அதே நேரத்தில் ஒரு சில கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்முறை என்பது பல இடங்களில் நடக்கும் ஒன்று என நினைத்துள்ளனர். ஒரு சிலர் இந்த நடவடிக்கை அரியதாக நடப்பதாகவும் கூறுகின்றனர்.  அதே நேரத்தில் பொதுவாக இது குறித்து வெளிப்படையாக பேச பலரும் தயங்குகின்றனர் என்பதே உண்மையாகும்.

கேரள மாநிலத்தில் பேராயர் பிராங்கோ முலக்கல் விவகாரம் வெளியில் வந்த போது அந்த புகாரை அளித்த கன்னியாஸ்திரி அடைந்த துயரங்கள் ஏராளமாகும். அந்த கன்னியாஸ்திரி கடந்த 2014 முதல் 2016 வரை பேராயர் தன்னை மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தும் கத்தோலிக்க தலைமை நடவடிக்கை எடுக்காததால் அவர் காவல்துறையிடம் புகார் அளிக்க நேரிட்டுள்ளது.

ஆனால் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்த பிராங்கோ நிலக்கல் இந்த குற்றச்சாட்டை மறுத்தார். சுமார் 70 நாட்கள் ஆகியும் அவர் கைது செய்யப்படாத நிலையில் 5 கன்னியாஸ்திரிகள் 14 நாட்கள் போராட்டம் நடத்தியதால் அவர் கைது செய்யப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட சிஸ்டர் ஜோசபின் விலோனிக்கல் என்பவர், “கன்னியாஸ்திரிகள் சிலரே நாங்கள் தேவாலயத்துக்கு எதிரானவர்கள் எனவும் சாத்தானை வழிபடுபவர்கள் எனவும் குறை கூறினர்” என தெரிவித்துள்ளார்.

டில்லியில் பனி புரியும் ஒரு கன்னியாஸ்திரி, “நான் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தேவாலயத்தில் பணி புரிந்த போது அங்கிருந்த பாதிரியார் ஒருவர் என் மேல் ஈர்ப்புடன் இர்ந்தார். அவர் ஒரு நாள் பார்ட்டிக்கு சென்று விட்டு இரவு தாமதாமாக வந்து என்னுடைய அறைக்கதவை தட்டினார். அவர் என்னுடன் ஆன்மிகம் குறித்து பேசுவார் எனக் கூறியும் நான் கதவை திறக்காததால் வலுக்கட்டாயமாக என் அறைக்கதவை தள்ளி திறந்தார்.

அவர் குடித்திருந்ததை வாசனையில் நான் உணர்ந்தேன். நான் அவர் நிதானத்தில் இல்லாததால் அவருடன் பேச மறுத்தேன். அவர் எனக்கு முத்தம் கொடுக்க முயன்று தவறான இடங்களில் தொட்டார். நான் அவரை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளி கதவை பூட்டினேன்.

இந்த நிகழ்வு பலாத்காரம் இல்லை எனினும் எனக்கு அச்சமாக இருந்தது. நான் மதர் சுப்பிரியரிடம் நடந்ததை சொன்னேன். அவர் அதற்கு பிறகு என்னை அந்த பாதிரியாரை சந்திக்க விடவில்லை. மேலும் அவர் இது குறித்து அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிலை” என தெரிவித்துள்ளார்

இது குறித்து டில்லியை சேர்ந்த கன்னியாஸ்திரியும் தத்துவ இயல் அறிஞருமான ஷாலினி முலக்கல், “கத்தோலிக்க வரலாற்றில் பல பெண்கள் தங்கள் புனிதத்தை காக்க உயிர் துறந்த வரலாறு உண்டு. திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததால் புனிதர் அகதா மார்பகங்கள் கிழித்து கொலை செய்யப்பட்டார். புனிதர் லூசி தனது கற்பை காத்ததற்காக உயிருடன் எரிக்கப்பட்டார். மற்றும் ஒருவரான புனிதர் மரியா கோரோட்டி தனது 11 வயதில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரால் கொல்லப்பட்டார்.

ஒரு கன்னியாஸ்திரி பாதிரியாருக்கு எதிராக புகார் அளிப்பது என்படு தேவாலய நிர்வாகத்தில் நமது உயர் அதிகரி மீது குற்றம் சுமத்துவதாகும். இதனால் ஏராளமான வதந்திகள் கிளம்பி நமது நற்பெயருக்கு களங்கம் உண்டாகக்கூடும். அத்துடன் கன்னியாஸ்திரிகள் என்றாலே சிறிது குறைவாக மதிப்பிடும் நிலை உண்டாகும். அது மட்டுமின்றி மாற்று மதத்தவரான இந்துத்வ அமைப்புக்களும் நம்மை கடுமையாக விமர்சிக்கலாம்.

ஒரு கன்னியாஸ்திரி மது போதையில் இருந்த பாதிரியாரை எதிர்கொண்டதை வெளியில் சொன்னால் தனிமைப்படுத்தப் படலாமென பயந்துள்ளார். இது போன்ற பயங்களால் நாங்கள் இது குறித்து வெளியே சொல்ல இயலாத நிலையில் உள்ளோம். நாங்கள் மட்டும் அல்ல பொதுவாகவே பல பெண்கள் பாலியல் சீண்டல்களை மறைத்து சரியாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்” என தெரிவித்துள்ளார்

 

நன்றி :  தி அசோசியேடட் பிரஸ்.