சென்னை:

மிழகத்தில் செவிலியர்கள் (நர்ஸ்) சீருடை விரைவில் மாற்றப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில்  சுமார் 20 ஆயிரம் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களள் தற்போதுவரை  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிராக்’ என்ற வெள்ளை நிற ஆடைகளையே உடுத்தி வருகின்றனர். இந்த சீருடை அசவுகரியமாக இருப்பதால் அதை மாற்ற வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனை செவிலியர்கள் போல சுடிதார் அணி அனுமதிக்க வேண்டும் என்றும்  ஒருதரப்பு செவிலியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதே நேரத்தில் தங்களுக்கு  பணி சீருடை (uniform) மாற்றம் தேவையில்லை என்றும்,  எங்களின் வழிகாட்டி மதிப்பிற்குறிய ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் அவர்களால் பெற்ற சீருடை இது. இத்தனை ஆண்டுகள் வசதி வாய்ப்பு இல்லாத காலங்களில் பிணியாளர்களுக்கு இந்த சீருடையில் தான் சேவை செய்து வந்தோம். நூற்றாண்டுகள் கடந்த இந்த சீருடை அப்போதெல்லாம் எந்த பிரச்சனைகளுக்கும் அவமரியாதைகளுக்கும் ஆளாகவில்லை. இந்த சீருடைக்கென்று பொதுமக்களிடம் தனி மரியாதையும் மதிப்பும் உண்டு ஆகவே சீருடை மாற்றம் வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்து உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் செவிலியர் சீருடை மாற்றப்பட இருபபதாகவிம்,  இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி வழங்கி இருப்பதாகவும்  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செவிலியர்களின் சீருடை மாற்றப்பட இருப்பது குறித்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி  உமாமகேஸ்வரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றுறும், இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.