செவிலியர் உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது

சென்னை

செவிலியர்கள் கடந்த 3 நாட்களாக  நடத்திய போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

சென்னை டி எம் எஸ் வளாகத்தில் மூன்று நாட்களாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.   இன்று சென்னை உயர்நீதிமன்றம் செவிலியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தர்விட்டது.

மேலும் தமிழ்நாடு அரசுக்கு செவிலியர்கள் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அந்த அறிக்கையை உடனடியாக நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.   இதன் மேல் விசாரணை கிறுஸ்துமஸ் விடுமுறைக்குப் பின் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    இதையொட்டி செவிலியர்கள் தங்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.