சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை: சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை:

த்துணவு திட்ட முட்டை டெண்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

த்துணவுக்கு  முட்டை வழங்கப்படும்  டெண்டர் இன்று இறுதி செய்யப்பட இருந்த நிலையில், அதை  எதிர்த்து  சென்னை உயர்நீதி மன்றத்தில் கோழிப்பண்ணை கள் சார்பில் நேற்று அவசர வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு இன்று பதில் அளித்த உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்,  இது சம்பந்தமாக வரும் 14-ம் தேதி வரை தமிழக அரசு அவகாசம் கேட்டதை தொடர்ந்து டெண்டருக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

ரூ.220 கோடி மதிப்புள்ள சத்துணவு முட்டை  டெண்டரில், இந்த ஆண்டு ஆறு மண்டலங்களாக பிரித்து வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான டெண்டர் இன்று முடிவடைய இருந்த நிலையில்,  டெண்டரை எதிர்த்து  4 கோழிப் பண்ணைகள் உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தமிழகஅரசு பதில் அளிக்க அவகாசம் கோரியநிலையில், டெண்டருக்கு தடை விதித்து  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சத்துணவுக்கான முட்டை டெண்டர் விவரம்:

2017-18 ஆண்டுக்கு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 48 லட்சம் முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் புள்ளிகளை கோரி தமிழக அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 20-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

அதில் மாநிலத்தில் உள்ள சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வெளி மாநில கோழி பண்ணைகள் பங்கு பெறுவதை தடை செய்தும், தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக ஒப்பந்த புள்ளிகள் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக தனியார் கோழி பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி டெண்டருக்கு தடை விதித்து வெளி மாநில கோழி பண்ணைகளையும் அனுமதிக்கக் கோரி கரூரை சேர்ந்த வாசுகி கோழி பண்ணை உள்பட 4 கோழிப்பண்ணைகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, கொள்முதல் விவகாரத்தில் அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள உரிமை உள்ளது. குறிப்பிட்ட நபருக்கு சாதகமாக செயல்பட இந்த அரசாணை பிறப்பிக்கப்படவில்லை, ஆரோக்கியமான போட்டிக்காவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இடைத்தரகர்களை தவிர்ப்பதற்காகவே இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தமிழக அரசு கால அவகாசம் கோரியதை தொடர்ந்து டெண்டருக்கு தற்காலிக மாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Nutritious egg Tender ban: Chennai High Court order, சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை: சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
-=-