ஐஎன்எக்ஸ் முறைகேடு: ப.சிதம்பரத்தை கைது செய்ய செப்.28 வரை தடை நீட்டிப்பு

டில்லி:

என்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தை கைது செய்ய செப்.28 வரை தடையை நீட்டித்து டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த  2007ம் ஆண்டு  நிதி அமைச்சராக  ப.சிதம்பரம் இருந்தபோது,   பீட்டர் முகர்ஜி,  அவரது மனைவி இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதி முறைகளுக்கு மாறாக ரூ.305 கோடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த முறைகேட்டில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் ஈடுபட்டிருந்ததாக கூறி குற்றம் சாட்டப்பட்டு, இது தொடர்பாக ஏற்கனவே கார்த்தி சிதம்பரம் சிறையில் அடைக்கப் பட்டதும் தெரிந்ததே.

இந்த முறைகேடு தொடர்பாக, ப.சிதம்பரத்திற்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது. இதற்கிடை யில், ப.சிதம்பரம் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கும் ஆஜராகியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டில்லி உயர்நீதி மன்றம், ப.சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 28ந்தேதி வரை தடையை நீட்டித்து உத்தரவிட்டது.