புதுடெல்லி:

குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து அரசியல் வல்லுநர்கள் கூறும்போது, 2019- ஆண்டு மக்களவை தேர்தலில் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக உள்ளது.

ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் தொகையை 20 சதவீத பரம ஏழைகளின் கணக்கில் வரவு வைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள்.
இந்த திட்டத்தை செயல்படுத்த காங்கிரஸ் கட்சி 2 அம்சங்களை நியாயப்படுத்துகிறது.

ஒன்று,இந்தியாவில் உள்ள வறுமையை முற்றிலும் அகற்ற இந்த திட்டம் உதவும் என்று காங்கிரஸ் கூறுகிறது.

2011-12-க்குப் பிறகு புதிய வறுமை விகிதம் தொதடர்பான புள்ளிவிவரம் மத்திய அரசிடம் இல்லை.

பரம ஏழை என்பது 20 சதவீதத்தை தாண்டாது. இந்த திட்டம் வறுமையை ஒழிக்கும் என்பது காங்கிரஸின் கணக்கு. எனினும், இந்த திட்டம் மக்களுக்கு அமைதியான வாழக்கையை நடத்திச் செல்ல உதவும்.

ஆனால், இது போன்ற வருவாயை பெருக்குவதால் முற்றிலும் வறுமை ஒழிந்து விடாது. கிராமப் பொருளாதாரம் சமநிலையை அடையும். இந்த திட்டத்தை சரியாக கையாளாவிட்டால் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும்.

பொதுவாக இந்த திட்டம் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறியுள்ளனர்.