பிரியங்கா சோப்ரா குறித்து சர்ச்சை கருத்து: அமெரிக்க இணையதளத்திற்கு கடும் எதிர்ப்பு

மும்பை:

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவைப் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்ட அமெரிக்க இணையத்தளம் ‘தி கட்’ (The Cut), கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. நெட்டிசன்களிடமிருந்து பெரும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அவற்றை நீக்கியுள்ளது.

பிரியங்கா சோப்ரா ஒரு ஏமாற்று நடிகை, நிக் ஜோனஸை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார் என்று அந்த இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. மரியா ஸ்மித் என்பவர் அந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார்.

இந்த மாதம் 1ம் தேதி, நடிகை பிரியங்கா சோப்ராவிற்கும் பாப் பாடகர் நிக் ஜோன்ஸுக்கும், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அரண்மனையில் கிறிஸ்தவ முறைப்படி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இந்தி திரையுலகில் பிரியங்கா சோப்ரா நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார். தமிழில் நடிகர் விஜய்யுடன் தமிழன் என்ற படத்தில் பிரியங்கா நடித்திருக்கிறார். பின்னர், ஹாலிவுட் படங்களிலும், தொடர்களிலும் அவர் நடித்தார். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

இந்நிலையில், பிரியங்கா-நிக் ஜோனஸ் இடையேயான காதல் உண்மை இல்லை. ஹாலிவுட்டில் கவனம் செலுத்துவதால் அமெரிக்க பாடகரை திருமணம் செய்துள்ளார். பிரியங்கா ஒரு மோசடி நடிகை என்றும் மரியா ஸ்மித் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களும், ரசிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதை தொடர்ந்து, பிரியங்கா பற்றி வெளியான சர்ச்சைக்குரிய செய்திக்கு வருத்தம் தெரிவித்து அதன் இணையதளத்தில் இருந்து நீக்கிவிட்டது.

கார்ட்டூன் கேலரி