தஞ்சை: ஓ.பி.எஸ். பேனர்கள் கிழிப்பு! பதட்டம்

தஞ்சை,

ஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவு பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி பதற்றமாக காணப்படுகிறது.

அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்  மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து தஞ்சாவூரில், அவரது அணிக்கு ஆதரவாக மாற்று கட்சியினரை சேர்ந்த 10ஆயிரம் பேர் இணைவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கான விழா  நடைபெற இருக்கிறது.

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநிலப் பொருளாளர் தம்பிக்கோட்டை செந்தில் என்பவர் தலைமையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் நாளை இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

தர்மயுத்தம் என்ற பெயரிலான இந்த இணைப்பு விழா தஞ்சாவூரில் உள்ள திலகர் திடலில் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி தஞ்சை மாநகராட்சி முழுவதும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான பேனர்களை அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் கிழித்து எரிந்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும், நாளை நடைபெற இருக்கும் இணைப்பு மாநாட்டுக்கு வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.