சென்னை: பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக் கோள்களும் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. அனைத்து செயற்கைக் கோள்களும் சூரிய ஒத்திசைவு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

PSLV C-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்! இதில் கூடுதல் சிறப்பம்சமாக 19 செயற்கை கோள்களில் தமிழகத்தின் சில பொறியியல் கல்லூரி மாணவர்களின் செயற்கை கோள்களும் இடம்பெற்றுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இளம் விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுகள் என்று குறிப்பிட்டு உள்ளார்.