வியட்நாம் நாட்டில் ஒபாமா:  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம்

13255999_1221864407838515_2252271176120449250_n

வியட்நாம் நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, அதிபர் நாட்டின் மாளிகையில் உள்ள மீன்களைப் பார்வையிட்டு அவற்றுற்கு உணவு அளித்தார்.

வியட்னாம் அதிபரைச் சந்தித்து ஆலோசனை நடத்திய ஒபாமா, பின்னர் அதிபர் மாளிகையைச் சுற்றிப் பார்த்தார். அவருடன் அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவர் க்யென் தி கிம் நகன், உடன் சென்றார். அப்போது அங்குள்ள குளம் ஒன்றில் இருந்த மீன்களைக் கண்டு ரசித்த ஒபாமா,  குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவளித்தார்.

obama_vietnam

வியட்நாம் மீது அமெரிக்கா படையெடுத்து, ஆக்கிரமிக்க முனைந்ததும், அதை வியட்நாம் வெற்றிகரமாக முறியடித்ததும் வரலாறு.  கடந்த கால அந்த பகையை மனதில் கொள்ளாமல் இரு நாடுகளுக்குள்ளும் தற்போது நல்லுறவு ஏற்பட்டுள்ளது.

தற்போது வியாட்நாமிற்கு எதிரான ஆயுத தடையை அமெரிக்கா விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.