டிரம்ப் மறந்ததை…….. ஒபாமா நினைவுபடுத்தினார்…..

டெல்லி :

 

காதல் என்றால் யார்தான் விதிவிலக்கு, கலாச்சார காவலர்களை தவிர, டிரம்ப்ன் இன்றைய இந்திய வருகை, பல்வேறு பழைய நினைவுகளை அசைபோட வைத்திருப்பது மட்டும் உண்மை.

தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே என்ற இந்தி திரைப்படம் ஷாருகானை ஹிந்தி திரையுலகின் காதல் மன்னனாக மட்டுமல்ல பின்னாளில் பாலிவுட்ன் முடிசூடா மன்னனாக இருப்பதற்கும் திருப்புமுனையாக அமைந்த சூப்பர் ஹிட் திரைப்படம்.

அதுவரை வில்லனாகவே நடித்துவந்த ஷாருக் முதல்முறையாக காஜலுடன் சேர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம்.

இந்த திரைப்படத்தை இன்று தனது இந்திய பயணத்தின்போது அகமதாபாத் மோன்டேரா ஸ்டேடியத்தில் நினைவுகூர்ந்தார் டிரம்ப். இந்த படத்தை டிரம்ப் மட்டுமல்ல, இதற்கு முன் 2015 ல் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவும் நினைவுகூர்ந்தார்.

அதுமட்டுமல்ல, 2015 ல் தில்லி ராஜ் காட்-ல் உள்ள காந்தி நினைவிடத்தை பார்வையிட்ட ஒபாமா, அங்கு வைக்கப்பட்டிருந்த வருகையாளர் பதிவேட்டில், “டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அப்போது கூறியது இன்றும் உண்மையாகவே உள்ளது. ‘காந்தியின் ஆன்மா இன்றும் இந்தியாவில் மிகவும் உயிருடன் இருக்கிறது’. அது உலகிற்கு ஒரு பெரிய பரிசாக உள்ளது. எல்லா மக்களிடமும் தேசங்களிடையேயும் நாம் எப்போதும் அன்பு மற்றும் அமைதியின் உணர்வில் வாழ்வோம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்று சபர்மதி ஆசிரமம் வந்த டிரம்ப் “அன்பு நண்பர் மோடிக்கு, இது ஒரு அருமையான பயணம் தங்களுக்கு நன்றி” என்று மட்டும் பதிவிட்டிருந்தார். மகாத்மா காந்தியை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும்.

மாலையில் டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்ப் உடன் காதல் சின்னமான “தாஜ் மஹாலை” சுற்றிபார்த்தது, இந்தியாவில் என்றும் வாழும் அன்பையும் காதலையும் பெருமைப்படுத்துவதாக இருந்தது.