அரசியலை கிழித்து நார் நாராகத் தொங்க விடும் படமாக ‘ஒபாம உங்களுக்காக’ இருக்கும் : இயக்குனர் நாநிபாலா

ஜே.பி.ஜே பிலிம்ஸ் எஸ்.ஜெயசீலன் தயாரிப்பில் , பாலகிருஷ்ணன் எனும் நாநிபாலா இயக்கத்தில் இன்றைய அரசியலை கிழிப்பதற்காகவே உருவாகி வரும் படம் ‘ஒபாம உங்களுக்காக’ .

வைரமுத்து பாடல்கள் எழுத , ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க , பி.லெனின் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிருத்விராஜ் மற்றும் கனகராஜ் இதுவரை நடித்திராத புது கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக அறிமுக நடிகை பூர்ணிஷா நடிக்கிறார்.

மேலும் இயக்குனர்கள் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், ரமேஷ் கண்ணா ஆகியோர் இயக்குனர்களாகவே நடிக்க, தயாரிப்பாளர் டி.சிவா, நித்யா, ராம்ராஜ், தளபதி தினேஷ், செம்புலி ஜெகன், கயல் தேவராஜ், விஜய் டிவ் புகழ் கோதண்டம், சரத் ஆகியோரும் நடிக்கிறார்கள்.