தற்போதைய அரசியலை தோலுரிக்கும் ஒபாமா உங்களுக்காக பட டீசர்…!

அறிமுக இயக்குநர் நாநி பாலா இயக்கியுள்ள ‘ஒபாமா உங்களுக்காக’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கதையின் நாயகனாக தொலைபேசி என ஆரம்பிக்கும் இந்த டீசரில், நீட் முதல் அரசியல் பிரமுகர் ஒருவர் பெண்ணுடன் தவறாக பேசும் ஆடியோ வரை இடம்பெற்றுள்ளன. இந்த டீசர் ஆரம்பம் முதல் எண்ட் கார்டு வரை தற்போது தமிழகத்தில் நடக்கும் அரசியல் பிரச்னைகளை தோலுரித்துக்காட்டியுள்ளன.

ஹெச்.ராஜாவின் தெறிக்கும் பன்ச் டயலாக், ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம் போட்டு சத்தியம் செய்தல், பிரபலமான அமைச்சர் ஒருவர் அந்த வீடு உனக்கு தெரியுமில்ல… அங்கே வந்துடும்மா! உள்ளிட்ட அரசியல்வாதிகளை மையம்வைத்து வசனங்கள் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்ட்டூன் கேலரி