‘பில்’ வீட்டுக்கு போகலாம் வா! கிளிண்டனிடம் பொறுமையிழந்த ஒபாமா!

மெரிக்காவின் முன்னாள் அதிபரும் இந்நாள் அதிபரும் சாதாரண நண்பர்களைப்போல நடந்து கொண்ட ருசிகர நிகழ்ச்சி இஸ்ரேலில் நடந்திருக்கிறது.

அண்மையில் காலமான இஸ்ரேலின் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரேசின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள டெல் அவிவ் நகருக்கு ஒரே விமானத்தில் வந்த முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும், இந்நாள் அதிபர் பராக் ஒபாமாவும் மீண்டும் அதே விமானத்தில் திரும்ப வேண்டியிருந்தது.

obama

ஒபாமா முதலிலேயே விமானத்தில் அமர்ந்த பின்பும் கிளிண்டன் விமானத்தில் ஏறாமல் கீழே இருந்தவர்களுடன் பேசிக்கொண்டே இருக்க,

பொறுமையிழந்த ஒபாமா விமானத்தில் கதவருகே வந்து நின்று “பில் போகலாம் வா!” என்று திரும்ப திரும்ப புன்னகைத்தபடியே கத்திக்கொண்டிருந்தார்.

கிளிண்டன் இன்னும் தாமதிக்கவே ஒபாமா சற்று கீழே இறங்கி வந்து “பில் வீட்டுக்கு போகலாம் வா!” என்று கத்த, கிளிண்டன் அதற்கு பின் மேலே ஏறிவர இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடியே நட்பாக தோளில் கை போட்டபடி விமானத்துக்குள் சென்றார்கள்

கார்ட்டூன் கேலரி