டெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்தாண்டே 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் வரும் 26ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்படக்கூடிய மருத்துவ இடங்களில் 50% ஓபிசி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கை. இது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமானது இட ஒதுக்கீட்டை அடுத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என்று கூறி இருந்தது.
இந் நிலையில் இந்தாண்டே, இட ஒதுக்கீட்டை செயல்படுத்த கோரி தமிழக அரசு, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், வரும் 26ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு இந்த தீர்ப்பை வழங்குகிறது.