ஓபிசி இடஒதுக்கீடு: அதிமுக மனுமீது பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு நடப்பாண்டே அமல்படுத்த கோரி அதிமுக கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்கும்படி  உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து  சென்னை உயர்நீதி மன்றம் கடந்த மாதம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதன்படி அடுத்த ஆண்டு முதல் இதை நடைமுறைப்படுத்தும் வகையில், 3 மாதத்திற்குள் மத்தியஅரசு முடிவு செய்ய வேண்டும் என தீர்ப்பில் கூறியிருந்தது.
ஆனால், நடப்பாண்டே, மருத்துவபடிப்பில் ஓபிசி இடஒதுக்கீடுசெயல்படுத்த வேண்டும் என அதிமுக சார்பில், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதி மன்றம், மனுமீது, மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.