பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தனி மெஜாரிட்டி பெறாத நிதீஷ்குமார், பா.ஜ.க. கருணையால் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

அண்மைக்காலமாக பீகாரில் குற்றச்சம்பவங்கள் பெருகி வருவதை சமூக வலைத்தளங்கள் வெளிச்சம் போட்டு காட்டுவதால் நிதீஷ்குமார், ஆத்திரம் அடைந்துள்ளார்.

இதனால் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில், பீகார் அரசாங்கம் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ..க்கள் மற்றும் அதிகாரிகள் பற்றி விமர்சித்தால் அது ‘சைபர் கிரைம்’ குற்றமாக கருதப்படும் என புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது, நிதீஷ் அரசு.

இது தொடர்பாக, மாநில ஐ.ஜி நய்யார் கான், வெளியிட்டுள்ள அறிவிக்கையில் “அரசாங்கம் மீது சமூக வலைத்தளங்களில் தனி நபர்களோ, அமைப்புகளோ அவதூறாக விமர்சித்தால், அது ‘சைபர்கிரைம்’ குற்றத்தில் சேர்க்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

“இவ்வாறு விமர்சிப்போர், கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள்” என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பீகார் அரசின் இந்த உத்தரவுக்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

– பா. பாரதி