அக்.15: ‘ஏவுகணை நாயகன்’ அப்துல்கலாம் பிறந்த தினம் இன்று

kalam2

அக்.15: ‘ஏவுகணை நாயகன்’ அப்துல்கலாம் பிறந்த தினம் இன்று

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர், அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் கனவு நாயகன் என தமிழக மக்கள் மட்டுமின்றி உலக மக்களால் அன்போடு  அறியப்பட்டவர், முன்னாள் மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம்.

இன்று அவரது பிறந்தநாள். இன்றைய நாளில் அவரை நினைவு கூறுவது ஒவ்வொருவரின் கடமையாகும்.  1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15ம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந் துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கலாம் தனது கடின உழைப்பால் இந்தியா மட்டுமல்ல உலகின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக உயர்ந்தார்.

தொடக்க கல்வி படிக்கும் போது, படிப்புச் செலவுக்கு பத்திரிகை விநியோகம் செய்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில் 1954ல் இயற்பியல் பட்டம் பெற்றார். 1960ல் ‘மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ (எம்.ஐ.டி.,)யில், ‘ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்’ பட்டம் பெற்று பணியில் இணைந்த்ர்.

‘பைலட்’ ஆக வேண்டுமென்பது தான் முதலில் இவரது கனவாக இருந்தது. பின் இவரது திசை மாறியது. டி.ஆர்.டி.ஒ., வில் ‘ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாபிலிஷ்மென்ட்’ தலைமை விஞ்ஞானியாக, பணியில் சேர்ந்தார்.

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார்.

பின்னர், 1969ம் ஆண்டு முதல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச் சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். தொடர்ந்து அக்னி, பிரித்வி போன்ற ஏவுகணை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார்.

இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981ம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.

1963 ம் ஆண்டு முதல் 1983 ம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார்.

ஜூலை 1992 முதல், டிச., 1999 வரை மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்தார். இந்த காலகட்டத்தில் தான், ‘பொக்ரான் -2’ அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

இந்தியாவை அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இடம்பெறச் செய்தார். நாட்டின் உயர்மட்ட அணு விஞ்ஞானி எனும் அளவிற்கு உயர்ந்தார்.

1997ல் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

2002ம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலாம், 2002 ஜூலை 25ல் பதவியேற்றார்.,

சிறப்பாக பணியாற்றிய இவர் ‘மக்கள் ஜனாதிபதி’ என்று நாடு முழுவதும் அழைக்கப்பட்டார்.

மாணவர்களின் மீது மிகுந்த அன்பு கொண்ட இவர், தன் வாழ்நாளில் லட்சக்கணக்கான மாணவர்களை நேரடியாக சந்தித்து, சிறந்த எதிர்கால சந்ததியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

மாணவர்களை ‘கனவு காணுங்கள்’ என அறிவுறுத்தினார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம், சென்னை அண்ணா பல்கலை., ஆமதாபாத் ஐ.ஐ.எம்., , இந்துார் -ஐ.ஐ.எம்., , மைசூர் பல்கலை., மற்றும் ஆராய்ச்சி மையங்களில் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார்.

நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் சென்று, மாணவர்களுடன் கலந்துரை யாடினார். 2015 ஜூலை 27ல் அவர் மரணிக்கும் போது கூட, மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டி ருந்தார். 2020ல் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்பது அவரது கனவு.

இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் மறைந்தார்.

அவரது கனவை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் கலாமின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்
இந்தியா 2020
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

அபதுல் கலாம் பெற்ற விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 –  சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.