அக்டோபர்-18: விஷாலின் `சண்டக்கோழி 2′ படம் வெளியாகிறது

டிகர் விஷால் நடித்து வரும் சண்டக்கோழி-2 திரைப்படம் அக்டோபர்-18 ஆயுத பூஜையன்று வெளியிடப்படும் என்று விஷால் அறிவித்து உள்ளார்.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகி வரும்  இந்தப் படத்தை ஃபிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் . சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்பட பலரும்  நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக விஷால் அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே, கடந்த  2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ் மின் நடிப்பில் வெளியான ‘சண்டக்கோழி’ படம்  பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சண்டக்கோழி-2 தயாரிக்கப்பட்டு வந்தது.

படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதால், படத்தை வெளியிட ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18ம் தேதி வெளியிட இருப்பதாக விஷால் அறித்துள்ளார்.

மேலும் இப்படத்தின் சிங்கிள் டிராக்கை விரைவில் வெளியிட இருப்பதாகவும் நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

இப்படத்தின் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.

You may have missed