அக்டோபர் 24 மருது சகோதரர்களின் நினைவுநாள்:  இறுதிப்போரின்போது நடந்த்து என்ன?

மானாமதுரை மருது அவர்களின் முகநூல் பதிவு:

ருது சகோதரர்களின் போர் முழக்கம் தென்னிந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வலிமைமிக்க போர்க் கருவிகளை திறமையாகக் கொண்ட தொழில் முறைப்போர் வீரர்களுடன் தன்மானமிக்க போராளிகள் நெஞ்சு நிமிர்த்திப் போரிட்டனர்.

இப்போரில் எதிர்பார்த்ததுதான் நடந்தது. உலகத்திற்கே நாகரீகம் கற்றுக் கொடுத்ததாக, தற் பெருமை பேசியோர் உலகச் சரித்திரத்தில் அது வரை கண்டறியாத கொடுமைகளை அரங்கேற்றினர்.

பாஞ்சாலங்குறிச்சியில் மனிதமிருகமாக நடந்த பானர் மென் ஐ விடவும் சிவகங்கைப் போரில் ஆங்கிலேய அரக்கர்கள் கூடுதல் கொடுமைகளை அரங்கேற்றினர். முறையான போர்ப்பயிற்சி இல்லாதிருந்தும் கூட சிவகங்கையின் பாமர மக்கள் புலிக்குணம் வாய்க்கப் பெற்றவர்களாகப் போராடினர்.

சிறுவயல், காளையார்கோவில், கமுதி, பிரான் மலை, சோழபுரம் வயல் வெளிகளெல்லாம் அன்று போராளிகளின் குருதியால் மண்ணைச் சிவப்பாக்கின. துரோகி முகமது கலில் என்பவனின் வஞ்சத்தால் காளையார் கோவில் அரண் காட்டிக் கொடுக்கப் பட்டது. மருது பாண்டியர் தலைக்கு தலா 1500 சுருள் சக்கரப் பொன்னும் பாஞ்சாலங்குறிச்சி ஊமை(த்துரை) குமாரசாமி தலைக்கு 1000 சுருள் சக்கரமும் தருவதாக தண்டோரா போடப் பட்டது.

மதுரை ஆட்சியாளராக இருந்த பிளாக்பர்ன், கர்னல் அக்நியூ. ஆகியோரின் படைகள் துரோகி களின் துணையோடு 19-10-1801இல் மருதுபாண்டி யரைச் சோழபுரத்தில் (இது கவியோகி சுத்தானந்த பாரதியார் பிறந்த ஊர்) வைத்துப் பிடித்தனர். அக்டோபர் 24-இல் பெயரளவிலான விசாரணைக்குப்பின் போராளி மருதுபாண்டியரும் போர்களுக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாத 10, 12, வயது சிறுவர்களும் திருப்பத்தூர் கோட்டை புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டனர். ஒரு கட்டத்தில் சிவகெங்கை மாவட்டத்தில் புளியமரங்களெல்லாம் பிணங்களைச் சுமந்து நின்றன.

மருதிருவர் தலைகள் துண்டிக்கப்பட்டு காளையார் கோவில் ஆலயம் எதிரேயும் உடல் திருப்பத்தூர் சுவிடீஷ் மருத்துவமனை வளாகத்திலும் புதைக்கப்பட்டன. தான்தோன்றித்தனமாகவும் தாங்களே நிரந்தரம் என்ற ஆணவத்திலும் வெள்ளையர்கள் பல கொடூரங்களைப் போருக்குப் பின்னரும் அரங்கேற்றம் செய்தனர்.

இந்தத் தண்டனைகளுக்கெல்லாம் கம் பெனியின் மேலிடம் பின்னர்தான் ஒப்புதல் கொடுக்க முடிவு செய்தது என்பது குறிப்பிடத் தக்கது. சாட்சி விசாரணையும் புறம் தள்ளப்பட்டது. மருதிருவரைத் தூக்கிலிட்ட அதே தூக்கு மரத்தில் அவருடைய பேரன்களையும் தூக்கி லிட்ட கொடுமை சிவகங்கையில்தான் நிகழ்ந்தது. ஒரே மரத்தில் பல கிளைகளிலும் உடல்கள் தொங்கின.

இதைவிடப் பெருங்கொடுமையாக ஆங்கி லேயர்களால் திண்டுக்கல் பாளையக்காரர் எழு பத்து மூன்று வயது சிறுவர்கள், கோபால் நாயக்கர், பாஞ் சாலங்குறிச்சி செவத்தையா, ஊமை (துரை) குமாரசாமி ஆகியவர்களை விசாரணைக்கே இடம் கொடாமல் தூக்கிலிடப்பட்டதுதான். தூக்குத் தண்டனையிலிருந்து தப்பியோடிய எழுபத்து மூன்று போராளிகளை கடல்கடந்த வேல்ஸ் தீவு, பினாங்கு பூமிகளுக்கு நாடு கடத்தினர்.

மருதுபாண்டியரின் பதினைந்து வயது பாலகன் துரைசாமி 11-12-1802இல் தூத்துக்குடியி லிருந்து அட்மிரல் நெல்சன் கப்பலில் நாடு கடத்தப்பட்டவன் இறுதிவரை என்ன ஆனான் என்றே விவரம் தெரியவில்லை. இன்று சிங்கள ராஜபக்ஷே 2012இல் பச்சிளம் பாலகன் பாலசந்திரனை, பிஸ்கட் தின்னக் கொடுத்துக் கொன்றது போன்ற கொடூர சம்பவம் 1801 இலேயே அரங்கேறியது. மருதுபாண்டியர் உறவினர் என்று கருதப்பட்ட பால்மணம் மாறாத சிறுவர்களெல்லாம் அன்று தூக்கிலிடப்பட்டனர்.

இந்த வரலாறுகளெல்லாம் Indian Council Historical Research எனும் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. இந்திய வரலாற்றுக் கழகம் இந்திய விடுதலைப் போர்களின் சம்பவங்களை அதன் உண்மைப் போக்கிலேயே பதிவு செய்யும் படியும் உண்மையான வரலாற்றையே மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அண்மையில் திரு.கே.இராஜையன் போன்றவர்களால் நீதி மன்றத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

1800-1801இல் சிவகங்கையில் நடந்த விடு தலைப் போரே முதல் விடுதலைப்போர் என்பதை இந்திய வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டதோடு 1851இல் நடந்த போர் குறித்தும் பல கேள்விகளை ஏற்படுத்தி உள்ளனர்.

வரலாறு என்பது வடக்கிலிருந்து வரவில்லை. ரத்தம் தோய்ந்த இந்திய விடுதலைப் போர் நெல்லைச் சீமையில் தொடங்கி சிவகங்கையில் எழுதப்பட்டு பிறகுதான் டெல்லி சென்றது. உண்மையான சம்பவங்கள் உள்ளது உள்ள படியே எழுதப்படவேண்டும்: அதுதான் உண்மையான இறையாண்மைக்கு அடையாளம்.