காந்தி ஜெயந்தி: நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்!

சென்னை: அக்டோபர் 2ந்தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.  சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட  ஆட்சியர் சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டல் மற்றும் கிளப்புகளில் உள்ள மதுபான பார்களையும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மேலும், விதிகளை மீறி டாஸ்மாக் கடைகளை திறப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  எச்சரித்துள்ளார்.

ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், குடியரசு, மே தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட நாட்களில் விடுமுறை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.