அக்டோபர் மாத ஜிஎஸ்டி மொத்த வசூல் ரூ.95000 கோடி

பெங்களூரு

க்டோபர் மாதம் ரூ.95000 கோடி ஜி எஸ் டியில் வசூலாகி உள்ளதாக ஜிஎஸ்டி கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் மோடி ஜி எஸ் டி கவுன்சிலில் தலைவர் பொறுப்பு வகிக்கிறார்.  இவர் சமீபத்தில் பெங்களூருவில் ஒரு நிகழ்வில் ஜி எஸ் டி வசூல் பற்றி தெரிவித்துள்ளார்.

சுஷீல் மோடி, “செப்டம்பர் மாதம் ரூ93141 கோடியாக ஜிஎஸ்டி யின் மொத்த வசூல் இருந்தது.   ஆனால் அக்டோபர் மாதம் ஜி எஸ் டியின் மொத்த வசூல் ரூ.95000 கோடியை எட்டியுள்ளது.  ஜி எஸ் டி அறிமுகத்தினால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.   ஆகஸ்ட் மாதத்தில் மாநிலங்களுக்கு 28.4% வருவாய் இழப்பு ஏற்பட்டது.  அக்டோபர் மாதம் இந்த இழப்பு 17.6%ஆக குறைந்துள்ளது.   அதாவது ஆகஸ்டில் ரூ.12208 கோடியாக இருந்தது தற்போது ரூ.7560 கோடியாக குறைந்துள்ளது.    இது ஒரு நல்ல முன்னேற்றம் ஆகும்.  ஜி எஸ் டி படிப்படியாக முன்னேறி வருவதை இது காட்டுகிறது.

கடந்த 15ஆம் தேதி முதல் அமுலாக்கப்பட்டுள்ள ஜி எஸ் டி வரி விகித மாற்றங்கள் பொதுமக்கள்க்கு மகிழ்ச்சியை அளித்துள்ளன.   ஆரம்பத்தில் 28% வரி விதிக்கப்பட்டிருந்த பல பொருட்களின் வரிகள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.  சிகரெட் மற்றும் ஆடம்பர பொருட்கள் மட்டுமே 28% வரி விதிப்பின் கீழ் உள்ளது” என தெரிவித்துள்ளார்.