திருவனந்தபுரம்:

சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் நாளை முதல் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று டிஜிபியும் கேரள மாநில காவல்துறைத்தலைவருமான லோக்நாத் பெஹெரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் நாளை முதல் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை 40 சதவிகிதம் குறைக்க முடியும். மேலும், டிரைவர் உட்பட 3 பேர் காரில் பயணம் செய்யலாம் செய்ய அனுமதிப்படுவார்கள். பெண்கள் இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் அரசு வாகனங்களுக்கு தளர்வு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு பயணம் செய்பவர்கள் அதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கேரளாவுக்குள் பணியாற்றுபவர்கள் அலுவலகம் செல்லும் போது, அடையாள அட்டையை காண்பித்து விட்டு பயணிக்கலாம். இருந்தாலும் கேரளா மாவட்டங்களிடையே பயணம் செய்ய மருத்துவம் மற்றும் உணவுகளை கொண்டு செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.