ஒடிசாவில் 24 மணிநேரத்தில் 1,876 பேருக்கு கொரோனா தொற்று: 50000ஐ கடந்தது மொத்த பாதிப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் 24 மணிநேரத்தில் 1,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,000 கடந்தது.

ஒடிசா மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 24 மணி நேரத்தில் புதிதாக 1,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,672 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 305 ஆக அதிகரித்துள்ளது. இன்று கண்டறியப்பட்டுள்ள 1,876 கொரோனா பாதிப்பில் 1,182 பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் கண்டறியப்பட்டுள்ளனர். 694 பேருக்கு தினசரி பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஒடிசாவில் தற்போது 15,508 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 34,806 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.