கேரளாவுக்கு ஒடிசா மேலும் ரூ.5 கோடி…..மணிப்பூர் ரூ.2 கோடி நிதி

திருவனந்தபுரம்:

கேரளாவுக்கு மேலும், ரூ.5 கோடி மற்றும் ரூ.8 கோடி மதிப்பு நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘கேரளா மாநில அரசின் துயர் துடைப்பு பணிகளுக்கு ஒடிசா மாநில அரசு கூடுதலாக ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்படும். மேலும், ரூ.8 கோடி மதிப்பு 500 மெட்ரிக் டன் பாலிதீன் ஷீட் அனுப்பி வைக்கப்படும்.

ஒடிசாவில் இருந்து 244 தீயணைப்பு படைவீரர்கள், 65 மீட்பு படகுகள் அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவுக்கு தேவையான உதவிகளை செய்துதரும்படி நிவாரண குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்’’என்றார். இதேபோல், மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் ரூ.2 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.