டில்லி:

நாடு முழுவதும் 17வது மக்களவைக்கான தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நேற்றைய வாக்குப்பதிவு சராரியாக 65 சதவிகிதம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ள நிலையில்,  ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில்  6 வாக்குச்சாவடிகளில் ஒருத்தர் கூட வந்து ஓட்டு போடவில்லை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால், 15 வாக்குச்சாவடிகளில் ஒருவர்கூட வாக்களிக்க வில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள மாவோயிஸ்டுகளின் கடுமை யான எச்சசரிக்கையை தொடர்ந்தே மக்கள் யாரும் தங்களது வாக்குகளை செலுத்த முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் நாடாளுமனற் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டத்தில் ஒடிசா உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. ஒடிசாவில் நேற்று மக்களவை தேர்தலோடு சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.

ஒடிசாவில் சில பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் ஆதிகம் இன்றளவும் நீடித்து வருகிறது . மால்கன்கிரி மாவட்டம் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் பாதுகாப்புகளை பலப்படுத்தி வாக்குச்சாவடிகள் அமைத்து, மக்களை தைரியமாக  வாக்களிக்க வரும்படி மக்களுக்குச வேண்டுகோள் விடுத்தது.

ஆனால், மால்கன்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் மிரட்டலுக்கு பயந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த சுமார் 15 வாக்குச்சாவடிகளில் ஒருவர் கூட வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்யவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.