புவனேஷ்வர்:

டிசா மாநிலத்தில் ஊரடங்கு  வரும் 30 ஆம் தேதி வரை  நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே கோவா, பஞ்சாப் மாநிலங்களில் ஊரடங்கை 30ந்தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது ஒடிசாவும் ஊரடங்கை நீட்டிப்பு செய்துள்ளது.

மேலும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஜூன் 17ந்தேதி மூடியே இருக்கும் என்று அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இது வரும் 14ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், தற்போதுதான் நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதால், ஊரடங்கை நீட்டிக்க பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பிரதமர், மாநில அரசுகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 11ந்தேதி மீண்டும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்து, ஊரடங்கு நீட்டிக்கலாமா என்பது குறித்து அறிவிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில்,  ஒடிசா மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி அறிவிக்கப்பட்டுஉள்ளதாகவும்,  அனைத்து கல்வி நிலையங்களும்  கல்வி நிலையங்கள் வரும் ஜூன் 17-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் நவீன் பட்நாயக் அறிவித்தார்.

ஒடிசாவில் இதுவரை 42 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  ஒடிசாவில் கொரோனா பாதிப்பு பிற மாநிலங்களை விட குறைவாகவே உள்ள போதிலும்,  ஊரடங்கை  நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.