ஒடிசா: ரூ.1.82 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இன்று வந்த பயணிகளின் உடமைகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது 3 பயணிகள் தங்களது ஷூ உள்ளே தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து சுமார் ரூ.1.82 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.