புத்தாண்டு: பூரி ஜெகநாதர் மணல் சிற்பம் உருவாக்கி வரவேற்ற சுதர்சன் பட்நாயக்

2019ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கி  பிரபல சிற்பியான சுதர்சன் பட்நாயக் வரவேற்றுள்ளார். இதை லட்சக்கணக்கானோர் கண்டுகளித்து வருகின்றனர்.

புத்தாண்டை உலகம் முழுவதும் மக்கள் வாண வேடிக்கையுடனும், ஆட்டம் பாட்டத்துடனும் கொண்டாடி வருகின்றனர். இந்த  நிலையில், ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தனக்கே உரிய பாணியில்,  பூரி ஜகனாதரின் உருவத்துடன் 2019ம்  ஆண்டை வரவேற்று சிற்பம் தயாரித்துள்ளார்.

இதை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.இதுவரை  5 லட்சத்திற்கும் அதிகமானோர் மணல் சிற்பத்தை கண்டுகளித்துள்ளதாக கூறப்படுகிறது.