ஓடிசாவில் சோகம்: வைரஸ் காய்ச்சலால் 34 நாளில் 50 குழந்தைகள் பலி!!

ஒடிசா,

டந்த 34 நாட்களில் 50 குழந்தைகள் ஒருவகையான வைரஸ் காய்ச்சலால்  இறந்துள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.

ஒடிசாவில் கடந்த 34 நாட்களில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50 குழந்தைகள் ஒருவகை மூளை காய்ச்சலால் உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக ஒடிசாவின்  மல்கன்கிரி கிராமத்தில் பரவி வரும் ’ஜப்பான் மூளையழற்சி’ (Encephlities) என்னும் ஒரு வகை மூளையைத் தாக்கும் நோயால், 50 குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.  மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜாப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் எனப்படும் இந்த வைரஸ் நோய் கொசுக்களினால்  பரவிவருகிறது.

 

அங்கு போர்கால அடிப்படையில் காய்ச்சலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காய்ச்சலை பரப்பும் வைரஸ், பன்றிகளை கடிக்கும் கொசுக்கள் மூலமாக பரவுகிறதாம்.

இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள பன்றிகளும் கொல்லப்பட்டு, புதைக்கப்பட்டு வருகிறது.

இந்த வைரஸால் ஏற்படக்கூடிய மூளைக்காய்ச்சல் அறிகுறி ஏற்படுவதற்கு கிட்டத்தட்ட 5 முதல் 15 நாட்கள் வரை ஆகும். காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் சோர்வு போன்றவற்றின் மூலம் இந்த நோய் தொற்றை தெரிந்து கொள்ளலாம்.

 

இந்த வைரஸால் கிட்டத்தட்ட 52க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்த நோய்த் தொற்று தொடர்பாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.