ஏர் ஏசியாவின் சலுகை

ஏர் ஏசியா விமான நிறுவனம் வாடிக்கையாளர்களை
ஈர்க்கும்  விதமாக குறைந்த விலையில் விமான சேவையை அறிவித்துள்ளது.

விமான நிறுவனங்கள் பல, தொடர்ந்து சலுகை  கட்டணங்களை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், ஏர் ஏசியா நிறுவனமும் ரூ.1,499 கட்டணத்தில் ஒரு வழி விமான சேவையை அளிப்பதாக அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரையான பயணங்களுக்கு குறிப்பிட்ட விமானங்களில் வரும் 25ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்தால் இந்த குறைந்த கட்டணத்தைப் பறக்கலாம்.

டில்லி, மும்பை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், கோவா, புனே, இம்பால் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது.

இந்த கட்டணத்தில் விமானநிலைய வரியும் அடங்கும். ஆனால், சில விமானங்களில் பயணத்திற்கு முன்புதான் விமானநிலைய வரி பெறப்படும் என்று ஏர் ஏசியாவின் இணையதளத்தில்  அறிவிக்கப்பட்டுள்ளது.