ராகுல் காந்தி அமைத்துள்ள குழுவில் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்திய அதிகாரி .

டில்லி

டந்த 2016 ஆம் அண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சர்ஜிகல்
ஸ்டிரைக் நடத்திய ராணுவ அதிகாரி காங்கிரஸ் அமைத்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ளார்..

 

மோடிஅரசு பெருமையுடன் பேசி வரும் ஒரு விஷயம் 2016 ஆம் ஆண்டு நடந்த தீவிரவாத ஒழிப்பான சர்ஜிகளல் ஸ்டிரைக் ஆகும். அந்த நிகழ்வில் ஏராளமான தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதாக இன்று வரை பாஜக அரசு பெருமையுடன் பேசி வருகிறது.

இந்த சர்ஜிகல் ஸ்டிரைக்கை முன்னின்று நடத்திய ராணுவ அதிகாரி ஜெனரல் டி எஸ் ஹூடா என்பவர் ஆவார்.

இவர் தேசிய பாதுகாப்பு படை தலைவராக பணி புரிந்தவர் ஆவார். 2016 ஆம் வருட சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்த அனத்து திட்டங்களையும் இவரே வகுத்துள்ளார். இவருடைய ஆலோசனையின் கீழ் பல ராணுவ நிபுணர்கள் இந்த பணியில் ஈடுபட்டு தீவிரவாதிகளை அழித்துள்ளனர்.

தற்போது ராணுவ அதிகாரி டி எஸ் ஹூடா வை காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி ஒரு குழுவில் இணைத்துள்ளார். அந்தக் குழு தேசிய பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்க உள்ளது.