கொரோனா கையாளுதல் குறித்து மோடியைப் புகழ்ந்த அதிகாரி கொரோனாவால் மரணம்

டில்லி

மோடி கொரோனாவை சிறப்பாகக் கையாள்வதாகப் புகழ்ந்த அதிகாரி கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார்.

 

அரசு அதிகாரியான ஆனந்த் தம்பி என்பவர் ஐ ஆர் எஸ் படித்து அதிகாரியாகி உள்ளார். இவர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தனி செயலாளராகப் பணி புரிந்து வந்தார்.  தற்போது 32 வயதே ஆகும் இவர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா கையாளுதல் குறித்து மோடியைப் புகழ்ந்தார்.

பிரதமர் மோடி கொரோனாவை சிறப்பாகக் கையாளுவதாக ஆனந்த் தம்பி தெரிவித்தது ஊடகங்களில் மிகவும் பரவலானது.  இதை பாஜக தொண்டர்கள் மேலும் மேலும்  பகிர்ந்து வைரலாக்கி மகிழ்ந்தனர்.

ஆனந்த் தம்பி சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.   ஆயினும் 32 வயதே ஆன ஆனந்த் தம்பி சிகிச்சை  பலனின்றி உயிர் இழந்தார்.

மோடி கொரோனாவை சிறப்பாகக் கையாள்வதாகப் புகழ்ந்தவரே கொரோனாவுக்கு பலியானது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.