அதிகாரிகள் இரண்டுவிதம்!: அமீரக மன்னர் ஷேக் முகமதுவின் ட்விட்

திகாரிகள் குறித்து அமீரக மன்னர் ஷேக் முகமது ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில் இருவகை அதிகாரிகள் குறித்து தெரிவிக்கிறார்.

அந்த பதிவு:

“அதிகாரிகளில் இரண்டு வகையினர் உண்டு.  .

முதல் வகை அனைத்தும் நன்மைக்கே என்பவர்கள்.  இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவார்கள். இவர்களது நடவடிக்கைகள் மனிதர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தும்.

 

 

இவர்களுக்கு தாங்கள் தரும் சேவையின் மதிப்பு தெரியும்.

அவர்கள் மக்களின் நன்மைக்காக  புதிய கதவுகளை திறப்பதுடன் தேவைப்படும் தீர்வையும் வழங்குவார்கள்.

இன்னொருவிதமான அதிகாரிகள், மக்கள் தங்களுக்கு அடிபணிய வேண்டும் என்று நினைப்பவர்கள். மக்களை தவறாக எடை போடுபவர்கள். இவர்கள், நடவடிக்கைகள் மக்களின் வாழ்க்கையை மேலும் கடினமாக்கும். இவர்களின் மகிழ்ச்சி என்பது மக்கள் தங்களிடம் அடிபணிந்து தங்களது கதவுகளைத் தட்ட வேண்டும் என்பதே.

இவர்களது நடவடிக்கை மக்களின்  வாழ்வை கடினமாக்கும்.

எந்தவொரு அரசும் இரண்டாம்வித அதிகாரிகளை முதல்வித அதிகாரிகளாக மாற்றினால் வெற்றி அடைய முடியும்” என்று  ஷேக் முகமது தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

அவர் யாரை அல்லது எந்த அரசை  குறிப்பிடுகிறார் என்கிற விவாதம் சமூகவலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.