மத்திய வனத்துறையில் அதிகாரி பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதுடெல்லி: மத்திய அரசின் வனத்துறை அதிகாரிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த அறிவிப்பு யுபிஎஸ்சி சார்பில் வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 90 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், வனவியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் இவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் 01.08.2020 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். யுபிஎஸ்சி சார்பில் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தமிழகத்தில் கோயம்புத்தூர், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறுகின்றன.

விரிவான விபரங்களுக்கும் விண்ணப்பித்தலுக்கும் www.upsc.gov.in என்ற வலைதளம் செல்லவும்.

கார்ட்டூன் கேலரி