சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்து வருகிறது. அதேவேளையில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருவதால், சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், சென்னை சென்டிரல் ரயில் முழுவதும் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக, இன்றும் (வியாழக்கிழமை) மற்றும் சனிக்கிழமையும், சென்னை  சென்டிரல் அருகே பூங்காநகரில் உள்ள தெற்கு ரயில்வேயின் தலைமை அலுவலகமான ( DRM Office Chennai Southern Railway) முழுவதும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன் காரணமாக இன்றும், சனிக்கிழமையும் அனைத்துப் பணியாளர்களும் வீடுகளில் இருந்தே பணியாற்ற  சென்னை சென்டிரல் ரயில் நிலைய தலைமை அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.